சரணடைந்தவரை கைது செய்த காவலருக்கு அபராதம்!
கொலை
வழக்கில் சரணடைந்தவரை நீதிமன்றத்திற்குள் நுழைந்து கைது செய்த கோவை தலைமை காவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ 500 அபராதம் விதித்துள்ளது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட சந்தோஷ் என்பவர், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர்கள், நீதிமன்றத்திற்குள் நுழைந்து, சந்தோஷை கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த திருப்பூர் பார் கவுன்சில், சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. காவல் துறையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, சரணடைந்தவரை நீதிமன்றத்திற்குள் நுழைந்து கைது செய்யக் கூடாது என காவல் துறையினருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் இன்று(ஜூலை 16) நேரில் ஆஜரான இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், தலைமை காவலர் ராபர்ட், டிரைவர் வேலன் ஆகியோர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கோரி மனுதாக்கல் செய்தனர்.
மேலும், நீதிமன்றத்திற்குள் காவல் துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்திற்குள் நுழைந்து சந்தோஷை கைது செய்த தலைமை காவலரின் மன்னிப்பை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.