பிரதமர் கூட்டத்தில் பந்தல் சரிந்தது!


பிரதமர் கூட்டத்தில் பந்தல் சரிந்தது!
மேற்கு வங்கத்தில் மோடி உரையின்போது பந்தல் சரிந்து விழுந்ததில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் அனைத்துக் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியும் பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று (ஜூலை 16) கலந்து கொண்டு உரையாற்றினார்.

“என் அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கமாகும், விவசாயிகளுக்கான அரசாங்கமாகும். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரண்டு மடங்காக அதிகரிக்கும்” என்று கூறினார்

“ஆனால், மேற்கு வங்கத்தில் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. எதிரிகளைக் கொல்வது மட்டுமே இங்குக் கொள்கையாக உள்ளது. அதிகாரத்தில் உள்ள சிலரின் அனுமதி இல்லாமல் பூஜை செய்வது உட்பட எதுவும் செய்ய முடிவதில்லை. ஓட்டு வங்கிக்காகவும், அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே சில குழுக்கள் செயல்பட்டு வருகின்றன” என்று குற்றம்சாட்டியிருந்தார். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த பந்தல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதைக் கண்ட பிரதமர் உடனடியாக பேச்சை நிறுத்திவிட்டு, அங்கிருந்த காவலர்களிடம் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



நிகழ்ச்சிக்குப் பிறகு மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பிரதமரிடம், ‘ஆட்டோகிராப்’ கேட்டுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றுப் பிரதமரும் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...