வாஷிங்டன்: மலேரியாவை ஒழிக்கும் 'டபினான்குயின்' எனும் மருந்துக்கு அமெரிக்காவின்
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.மலேரியாவால் உலகம் முழுதும் ஆண்டுக்கு 8.5மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர். கல்லீரலில் தங்கும் 'பிளாஸ்மோடியம் விவாக்ஸ்' என்னும் கிருமியால் இந்த நோய் வருகிறது. இந்த கிருமியை அழிப்பது கடினம். இந்த வகை மலேரியா பரவக்கூடியதாகும்.இந்த கிருமியை அழிப்பதற்கு தற்போது 'ப்ரைமாகுயின்' என்னும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனால் முற்றிலும் அழிக்க முடிவதில்லை. இதற்கு டபினான்குயின் மருந்து நல்ல மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவத்துறை இதை அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் பக்கவிளைவுகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மலேரியா அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்த மருந்து சோதனை செய்யப்பட உள்ளது.