சென்னை: பழங்குடி இன பட்டியலில், நரிக்குறவர்களை இணைக்க வலியுறுத்தி, இன்று(25.07.2018)
சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர், காரை சுப்ரமணியன், சென்னையில் நேற்று கூறியதாவது:நரிக்குறவர் என்ற குருவிக்கார இனத்தினர், தமிழகத்தில் கல்வி, பொருளாதாரம், நிலம், தொழில் இல்லாமல், வாழ்வாதாரம் இழந்துள்ளனர். படித்த இளைஞர்களுக்கும், வேலை வாய்ப்பில்லை.ஆனால், பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கான, மிகவும் பிற்படுத்தப்பட்ட இன பட்டியலில், எங்களை சேர்த்துள்ளனர்.ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, குருவிக்காரர்கள், பழங்குடி இன பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.நாங்கள், எம்.பி.,க்கள் மற்றும் மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர், ஜீவல் ஓரம் ஆகியோரை சந்தித்து, பலமுறை விளக்கி உள்ளோம்.கடந்த, 2016ல், பார்லிமென்டில், நரிக்குறவன் என்கிற குருவிக்கார இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவவேற்றப்பட்டது. 2017 மார்ச் 24ல், பார்லிமென்டில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.ஆனாலும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரில், பழங்குடி இன பட்டியலில், நரிக்குறவர்களை சேர்க்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில், உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.