நாவூறச் செய்யும் பழம்!


ஆரஞ்சுப் பழம் என்றாலே பலருக்கும் பிடிக்கும் இல்லையா? அதன் வாசனையும், சுவையும் நினைத்தாலே சாப்பிட வேண்டும் போலிருக்கிறது அல்லவா? ஆரஞ்சைப் பற்றிய சுவையான தகவல்கள்:

1. ஆரஞ்சுப் பழம் பெர்ரி குடும்பத்தைச் சேர்ந்தது.

2. ஆரஞ்சு மரங்கள் பசுமையான மரங்கள். அதாவது, Evergreen trees. 100 வருடங்களுக்கு மேலும் வாழக்கூடியவை.

3. சராசரியாக ஆரஞ்சு மரம் 30 அடிகள் வரை உயரமாக வளரலாம்.

4. ஆரஞ்சு உற்பத்தியில் 20% பழமாக விற்பனையாகிறது. மற்றது ஆரஞ்சுப் பொருட்கள் தயாரிப்பதற்குச் செல்கிறது.

5. ஒரு ஆரஞ்சு மரத்தில் 60,000 பூக்கள் வரை பூக்கலாம். ஆனால், அவற்றில் 1% மட்டுமே பழமாகிறது.

6. சாக்லேட் வெனிலா ஆகிய சுவைகளுக்கு அடுத்ததாக, பலரும் விரும்பும் சுவை ஆரஞ்சு.

7. உலகில் அதிகமாக வளரும் citrus பயிர் ஆரஞ்சு.

8. உலகம் முழுவதிலும் 600க்கும் மேற்பட்ட ஆரஞ்சு வகைகள் விளைகின்றன.

9. ஒரு ஆரஞ்சு விதையிலிருந்து, ஒன்றிற்கும் மேற்பட்ட ஆரஞ்சு மரங்கள் வளரலாம்.

10. உலகிலேயே அதிகமாக ஆரஞ்சு விளைவிக்கும் நாடு பிரேசில்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...