டிஜிட்டல் பேனர்களை அகற்ற எத்தனை உத்தரவு போட்டாலும் அரசு மதிப்பதில்லை என சென்னை
உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தட்சிணாமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., ஜி.எஸ்.டி. சாலைகளில் விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உரிமம் எண் குறிப்பிடவில்லை என்றும் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து பேசிய நீதிபதி டிஜிட்டல் பேனர்களை அகற்ற எத்தனை உத்தரவு போட்டாலும் அரசு மதிப்பதில்லை என்றும் உங்களால் அகற்ற முடியவில்லை என்றால் அதை ஒத்துக்கொள்ளுங்கள் எனறும் கூறியுள்ளனர். மேலும் பேனர்களை எப்படி அகற்ற வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்து வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றியுள்ளார். பட்டினப்பாக்கம் அருகே விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாகவும், பாஜக தலைவர் அமித்ஷா வருகையின் போது வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாகவும் தலைமை வழக்கறிஞர் வருத்தம் தெரிவித்தார்.