சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதன் மூலம், பொது மக்கள்
கண்காணிக்கப்படும் சூழ்நிலை நோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
*வழக்கு*
சமூக வலைதளங்களை கண்காணிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது தனி மனித உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக உள்ளதாகவும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
*நோட்டீஸ்*
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏஎம் கன்வில்கர் மற்றும் டிஓய் சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், பொது மக்களின் வாட்ஸ் ஆப் செய்திகளை பார்க்க அரசு விரும்புகிறது. இது கண்காணிக்கும் சூழ்நிலையில் வசிப்பது போன்ற நிலையை ஏற்படுத்தும் எனக்கூறினர். தொடர்ந்து இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.