இந்த பொருட்களை சேர்த்து உண்டால் மரணம் கூட ஏற்படலாம் உஷார் !

நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக பயன்படுத்தி ஆரோக்கியமாக
வாழ்ந்து வந்தனர். எந்தெந்த பொருட்களை சேர்த்து உண்டால் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து வைத்து இருந்தனர் .தற்போதைய சூழ்நிலையில் அனைத்தும் தலைகீழாக மாறி உணவே விஷமாக மாறிக்கொண்டு வருகின்றது . இக்கட்டுரையில் எந்தெந்த பொருட்களை சேர்த்து உண்டால் நம் உடல் ஆரோக்கியம் கெடும் என்பதைப்பற்றி காண்போம் .

பொதுவாக எதிர் எதிர் குணங்களைக் கொண்ட பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் பொழுது நம் உடலுக்கு ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படுகின்றன . அவை எவை என்று பார்ப்போம் .


பசலைக்கீரையோடு எள்ளை சேர்த்த உணவை அறவே தவிர்க்க வேண்டும் . இந்த இரண்டு பொருட்களிலும் ஒரே பண்பு இருப்பதினால் வயிற்றுப்போக்கு ஏற்படும் .


திப்பிலி யோடு மீன் கண்டிப்பாக சேர்க்கவே கூடாது இது மரணத்திற்கு வழி வகுக்கும். முக்கியமாக வருத்த மீனுடன் திப்பிலி சேர்க்கவே கூடாது .


நுரையீரல் சுவசப்பிரச்சனைகள் இருப்பவர்கள் துளசி அல்லது துளசி சாறு எடுத்துக்கொள்வார்கள் . அப்படிப்பட்டவர்கள் துளசி சாறு பருகி குறைந்தது அரைமணி நேரம் பால்  அல்லது பாலுடன் சேர்த்த எந்த விதமான பானங்களையும் பருகக்கூடாது .

தேன் மற்றும் சர்க்கரை கலந்த இனிப்புப்பண்டகளை உண்ணக்கூடாது. இப்படி உண்பதால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் உள்ளது.

முருங்கைக்காய், முள்ளங்கி , பூண்டு போன்ற பொருட்களை உண்ட பிறகு பால் கண்டிப்பாக குடிக்கக்கூடாது. அப்படி குடித்தால் சர்ம அலர்ஜிகள் வரும் .

எலுமிச்சை , மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற சில புளிப்பான பழங்களை உண்டப்பிறகு பால் குடிப்பதை தவிர்க்கவும். இதனால் ஜீரணப் பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் உள்ளன .

வாழைப்பழம் உண்டப்பிறகு மோர்  அருந்துதல் கூடாது. இதனால் நம் உடலில் பலப்பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் உள்ளன ஆகையால் இதனை அறவே தவிர்க்க வேண்டும்.

ஆகவே சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...