சாக்கடை அடைப்பை நீக்க, ரோபோ!

தஞ்சாவூர்: பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை சீரமைக்க, தமிழகத்தில் முதல் முறையாக
, கும்பகோணம் நகராட்சியில், &'ரோபோ&' இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியில், 2008 - ௦9 ஆண்டு முதல், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 125 கி.மீ., நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, 19 ஆயிரத்து, 421 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.&'பாதாள சாக்கடை குழாய்களில், துப்புரவு தொழிலாளிகள் இறங்கி, சுத்தம் செய்யக்கூடாது&' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை அப்புறப்படுத்த, கேரளாவை சேர்ந்த, விமல் கோபிநாத் என்ற பொறியாளர் உருவாக்கியுள்ள, ரோபோ இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.தமிழகத்தில் முதல் முறையாக, கும்பகோணம் நகராட்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்ட நிதியில், 9.44 லட்சம் ரூபாய்க்கு, இந்த ரோபோ வாங்கப்பட்டு, பரிட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டது. நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், இதன் செயல்பாட்டை துவக்கி வைத்தார்.
இது குறித்து, பொறியாளர் விமல்கோவிந்த் கூறியதாவது: பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை நீக்கும், ரோபோ, 60 கிலோ எடை உடையது. ஆறு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மானிட்டர் மூலம் கண்காணித்து, அதற்கு ஏற்றவாறு ரோபோவை இயக்க முடியும்.
கேரளாவின், திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு, ஏழு மாதங்களுக்கு முன், இரு இயந்திரங்கள் வழங்கினோம். தற்போது, கும்பகோணம் நகராட்சிக்கு ஒரு இயந்திரம் வழங்கிஉள்ளோம். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கு, நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும்,இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...