சிவகங்கை, சிவகங்கை அருகே திருவேலங்குடியில் கல்வித்துறை உறுதியளித்தபடி
தங்களது ஊரில் பள்ளி திறக்காததால், குழந்தைகளை வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.கவுரிப்பட்டி ஊராட்சி திருவேலங்குடியில் 400 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் 47 குழந்தைகள் இருந்தும் பள்ளி இல்லை. அவர்கள் காளையார்மங்கலம், ஒக்கூர், நாட்டரசன்கோட்டை, மேலக்காடு கிராமங்களில் படிக்கின்றனர்.தேவையான மாணவர்கள் இருந்தும் எம்.எல்.ஏ., சிபாரிசு இல்லாததால் பள்ளி திறக்கவில்லை. இது குறித்து 2017 ஆக., 4 ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அந்த ஆண்டே புதிய பள்ளியை துவங்க பள்ளிக்கல்விச் செயலர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து சிவகங்கை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மைய கட்டடத்தில் பள்ளி துவங்கப்படும்,&' என தெரிவித்தனர். ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை. இதனால் வெளியூர்களில் பயிலும் 47 குழந்தைகள், அவர்களுக்கு ஆதரவாக 6 முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் 26 குழந்தைகளை நேற்று பள்ளிக்கு அனுப்பவில்லை. குழந்தைகளுடன் ஊருக்கு வெளியே குடியேறினர்.
அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் செய்தனர். கல்வித்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் பள்ளி திறக்கப்படும்,என கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.முதன்மைக் கல்வி அலுவலர் குயின்எலிசபெத் கூறுகையில், அமைச்சரிடம் பேசிவிட்டோம். கருத்துரு அனுப்பி விரைவில் பள்ளி திறக்கப்படும், என்றார்.