மாணவர்களை செருப்பால் அடித்த பள்ளி தாளாளர்!

நீலாங்கரை, விடுமுறை நாளில், உடற்பயிற்சி
ஆசிரியையுடன், கடற்கரைக்கு சென்ற மாணவ - மாணவியரை, தனியார் பள்ளி தாளாளர், முட்டிபோட வைத்து, செருப்பால் அடித்ததாக எழுந்த புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில், பிரபல தனியார் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியை, ஹர்ஷா, 35, விடுமுறை நாளான, 7ம் தேதி, ஏழாம் வகுப்பு படிக்கும், மூன்று மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவியரை, நீலாங்கரை கடற்கரைக்கு அழைத்து சென்றார்.அதை, &'குரூப் போட்டோ&' எடுத்து, &'பேஸ்புக்&'கில் பதிவு செய்துள்ளார். இது, பள்ளி தாளாளர், நளினி வில்சனின் கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து தாளாளர், கடற்கரைக்கு சென்ற, மாணவ - மாணவியரை, நேற்று முன்தினம், பள்ளி வளாகத்தில், முட்டி போட வைத்துள்ளார். அவர்களை, தரக்குறைவாக பேசி, செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.இது குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி தாளாளர் மீது, நீலாங்கரை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் போலீசார், வழக்கு பதிவு செய்யாமல், இரு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...