ஆசியாவின் தென்பகுதியில் மட்டுமே வளரும் நன்னாரியின் இதர பயன்கள் அடங்கியுள்ளன இதன் வேரிலிருந்து எடுத்துதான் நன்னாரி சர்பத் தயாரிக்கப்படுகின்றன. இந்த சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் உடனடி புத்துணர்ச்சி தருகிறது.
மேலும் இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை இதற்கு உண்டு. இது மட்டுமில்லாமல் சிறுநீர் பிரச்சனையை சரிசெய்வது, உடலில் வேர்வை உற்பத்தியை அதிகரிப்பது, மூட்டு வலி, உடல் சூடு, தோல் நோய்கள், போன்றவற்றிற்கு இந்த நன்னாரி ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது
உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் விளையாட்டு வீரர்கள் நன்னாரி பானத்தை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது. கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம் நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.
நன்னாரிப்பால் செய்முறை:
நன்னாரியை எடுத்து நன்றாக இடித்துக்கொண்டு நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும், பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்துக்கொள்ளவேண்டும். தேவைப்படும் பொழுது இரண்டு தேக்கரண்டி பொடியை 500 மிலி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மில்லி லிட்டர் பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வரலாம்.
காபி டீ அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம் இதை பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும், உடல் கழிவுகள் வெளியேறும், உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும், தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்
