ஆன்லைனில் புகார்: ஆறு மாத கெடு!
காவல்நிலையங்களில்
ஆன்லைனில் புகார்களைப் பதிவு செய்யும் வசதியை ஆறு மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலையங்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஏற்கனவே, போலீஸ் விசாரணையின் நிலை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிவுத் தபால், இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், வழக்குகளைப் பதிவு செய்ய காவல் நிலையங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது, காவல்நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மீண்டும் அறிவுறுத்திய நீதிபதி, இதுகுறித்து டிஜிபி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.
“தனது சுற்றறிக்கையைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் குழு அமைத்து டிஜிபி கண்காணிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, இந்தக் குழு ஆய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழு அதிகாரி மாதந்தோறும் ஆய்வு செய்து, ஏதேனும் விதிமீறல் இருந்தால் காவல் துறை அதிகாரி விளக்கமளிக்க வாய்ப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்களை ஆன்லைனில் பதிவு செய்யத் தேவையான வசதியை அனைத்துக் காவல் நிலையங்களிலும் 6 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும். விசாரணை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களைப் பயன்படுத்தலாம்” என்று நீதிபதி தெரிவித்தார்.
இதுதொடர்பான அறிக்கையை வருகிற ஆகஸ்டு 2ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார்.