2009&TET ஊதிய மீட்புக்குழுவினர் 1 நபர் குழுவை சந்தித்த நிகழ்வின் விவரங்கள்



👍👍👍👍👍👍👍👍👍
*2009&TET ஊதிய மீட்புக்குழுவினர் 1⃣ நபர் குழுவை சந்தித்த நிகழ்வின் விவரங்கள்*
📽📽📽📽📽📽📽📽📽

_இன்று 01-08-2018 காலை 9 மணி அளவில் ஒரு நபர்குழு கருத்து கேட்பு கூட்ட அரங்கை நமது ஊதிய மீட்புக்குழுவினர் அடைந்தோம்!!_

*முதலாவதாக பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களது பொதுவான பிரச்சனைகள் குறித்து கேட்கப்பட்டது*

_மதிப்பிற்குரிய ஒரு நபர் குழு தலைவர் திரு. சித்திக் IAS அவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சனை குறித்து 3 விதமான கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளது.. இதனை குறித்து விவாதிக்கலாம் என்றார்கள்!!_

*1.மத்திய அரசுக்கு இணையான ஊதியம்!*

*2). 01.06.2009க்கு பின் நியமிக்கப்பட்ட  இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு!!*

*3.தனிஊதியம் ரூபாய் 2000த்தினை அடிப்படை ஊதியத்தில் இணைத்து அகவிலைப்படி மற்றும் ஆண்டு ஊதிய உயர்வுக்கு அனுமதித்தல்!*

_முதலாவதாக *நமது மாநில போராட்டக்குழு* தரப்பில் நமது ஊதிய முரண்பாடுகள் குறித்த விவரங்களை விரிவாக பேசினோம்!!_

💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼

1⃣ *60ஆண்டுகால ஊதிய வரலாற்றில்  இழைக்கப்படாத  அநீதி கடந்த 6 வது ஊதியக் குழுவில் 01.06.2009 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இழைக்கப்பட்டுள்ளது.   இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே துறை சார்ந்த, ஒரே பதவி வகிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரு வேறுபட்ட ஊதியத்தை 2009 முதல் தமிழக அரசு வழங்கி வருவது குறித்தும், அது துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியமாகும் என்றும் அழுத்தமாகவும் மிகத்தெளிவாகவும் பதிவு செய்யப்பட்டது!!*

2⃣ *5வது ஊதியக்குழு அடிப்படை ஊதியம் 4500...*

*இதனை தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வாறு கணக்கீடு செய்து 5200 என அமல்படுத்தியது முற்றிலும் தவறு , இது போன்று எந்த மாநிலத்திலும்  இல்லை..  இதனால் ஏற்பட்ட பாதிப்பு களைய 750PP அனைவருக்கும் வழங்கியது.  இதனால் முடிவு எட்டப்படாமல் இன்னும் தொடர்கிறது என்பதும் எடுத்துரைக்கப்பட்டது!!*

3⃣ *6வது ஊதியக்குழுவை மத்திய அரசு அமல்படுத்திய விதத்திற்கும், மாநில அரசு அமல்படுத்திய விதத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றியும் விளக்கமாக கூறப்பட்டது... அரசாணை 234 மற்றும் 258 மூலம் தமிழக அரசு கொண்டு வந்த AMENDMENT மூலம் 01.06.2009  on or after என்ற தவறான தேதியை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து ஊதியம் மறுக்கப்படும் நிலை "தவறு" என்றும்  கூறப்பட்டது*
*ஒரு ஊதியக்குழு ஊதியத்தை உயர்த்தி தான் வழங்க வேண்டும், ஆனால் 6 வது ஊதியக்குழு ₹3170  ஐ குறைத்து வழங்கியுள்ளது.*

4⃣ *6வது ஊதியக்குழு முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட 1 நபர் குழு 36 பிரிவினருக்கு மற்றும் 3 நபர் குழுக்கள் 24 பிரிவினருக்கும் மாற்றிவிட்டனர், ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தரக்கட்டு மற்றும் ஊதியம் மாற்றி அமைக்கவில்லை.  பிற துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு ஊதியத்தரக்கட்டு மாற்றி அமைத்துள்ள நிலைப்பாடு பற்றியும் வருத்தத்தோடு பதிவு செய்யப்பட்டது!!*

_மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தரமுடியாது என கூறியும் அரசு தரப்பு நிதிச் சுமை மற்றும் நிதிக் கொள்கை காரணம் என கூறியும் பல முறை மறுத்து உள்ளது..  நாங்கள் கேட்பது *சம வேலைக்கு சம ஊதியம்..* எங்கள் எண்ணிக்கை 21,000 க்குள் தான்.. செலவினம் ரூபாய் 200 கோடிக்குள் தான் வரும் என்று தெளிவாக கணக்கிட்டு  அட்டவணை பார்வைக்கு வைக்கப்பட்டது._

🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺
*நமது தரப்பில் உள்ள சாதகமான விசயங்கள்!!*
✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻

1⃣ *6வது ஊதியக்குழு முரண்பாடுகள் களைந்து 7வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் கொடுத்த உத்தரவாதத்தை தமிழக அரசு அமல்படுத்தாத நிலை!!*

2⃣ *நமது வழக்கு நிலுவையில் உள்ள விவரங்கள் பற்றியும்  கேட்டு அறிந்தார்.. நாம் நமது வழக்கின் மூலம் இடைகால தடையாணை பெற்று நாளது வரை 10,000 பேருக்கு மேல் தொடர்ந்து பழைய ஊதியமே பெற்று வரும் உறுதியை கேட்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார்..*
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
 *வழக்கு விவரம் மற்றும் ஆதாரங்களை பெற்றுக் கொண்டு அனைத்தையும் ✍🏼குறிப்புகள்✍🏼 எடுத்து கொண்டார்.!!*

3⃣ *நமது 4 நாட்கள் கடுமையான உண்ணாவிரதப் போராட்டம் விளைவாக நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் அவர்கள் நமது ஊதிய முரண்பாடுகள் களைய பரிந்துரை செய்து கொடுத்த கடித நகல் ஒரு நபர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது*.
*மேலும் அரசு தரப்பில் ஒரு நபர் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள விவரமும் நமது சார்பில் நினைவூட்ட ப்பட்டது*
👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓

4⃣ _சம வேலைக்கு சம ஊதியம்_ *என்ற இந்திய அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் பற்றியும் ஆதாரத்துடன் கூறப்பட்டது

5⃣ *மத்திய அரசு தரப்பில் அமைக்கப்பட்ட 5 வது ஊதியக்குழு மற்றும் 7வது ஊதியக்குழு சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் "சம வேலைக்கு சம ஊதியம்"* *என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் வழங்க வேண்டும் என்ற சாராம்சம் பற்றியும் நமது தரப்பில் ஆதாரமாக கூறப்பட்டது*.  

_இந்த காரணங்கள் அனைத்தும் தமிழக அரசு கருத்தில் கொள்ளாமல் *முரண்பட்ட ஊதியம் தொடர்ந்து வழங்கும் நிலை* குறித்து தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது_

*😁நமது தரப்பில் ஒரு மணி நேரம் விரிவாக பேச நேரம் கொடுக்கப்பட்டது மிகச் சிறப்பு, இன்றைக்கு நடந்த கூட்டத்தில் முதன் முதலில் கருத்து கூற ஆரம்பித்து அதிக நேரம் எடுத்துக்கொண்டதும் நாம் தான் என்பதும் மிகச்சிறப்பான ஒன்று. !!😁*
🎯🎯🎯🎯🎯

🤝🏼🤝🏼 *ஒரு நபர் குழு தலைமையின் பதில்!!*
📽📽📽📽📽📽📽📽📽
 _01.06.2009 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தரப்பில் கேட்கப்படும் கோரிக்கை மிக தெளிவாக புரிந்து கொண்டோம்._
_மேலும் இந்த *ஊதியக்குழுவில் பெரும் பாதிப்பு அவர்களுக்கு தான் ஏற்பட்டு உள்ளதை மறுக்க இயலாது.*_

*ஒரு நபர் குழு தனது அறிக்கையை தயார் செய்து தாக்கல் செய்யும் போது நிச்சயம் இடைநிலை ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக நல்லதொரு முடிவு கிடைக்கும் வகையில் குழு நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தெரிவித்தார்!!*

நமது வெற்றி பயணம் தொடர முக்கிய காரணம் *பழைய ஊதியம் தொடர்வது மட்டுமே* என்பதை அனைவரும் உணர்ந்திடுவீர்...

*வெற்றி என்பதும் எளிதல்ல....!!*
*அதனை விட்டுவிடும் எண்ணம் நமக்கு துளியும் இல்லை...*


💐💐💐💐💐💐💐💐💐
🙏 *ஜே. ராபர்ட்*🙏
 *"2009& TET இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்புக்குழு*
*மாநில தலைமை*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...