செயலாக்க பயிற்சிக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு!

சென்னை, சென்னை மாவட்ட அரசு பணியாளர்களுக்கு, ஆட்சி மொழித் திட்ட செயலாக்கப்
பயிற்சிக்காக, கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சென்னை மாவட்ட அரசு பணியாளர்களுக்கு, ஆட்சி மொழித் திட்ட செயலாக்கப் பயிற்சிக்காக, ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த நிதியில் இருந்து, அரசாணை, ஆய்வு, மொழிபெயர்ப்பு முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில், ஐந்து முறை பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. ஒரு பயிற்சிக்கு, 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், பயிற்சியில் பங்கேற்கும் அரசு பணியாளர்களுக்கு, விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், தற்போது, 50 ஆயிரம்ரூபாய் கூடுதலாக வழங்குவது குறித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்து.இதன்படி, இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு பயிற்சி வகுப்புக்கும், 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...