சென்னை மாநகராட்சியிடம் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் வாங்க முடியவில்லை : உயர்நீதிமன்றம் அதிருப்தி !!

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் தராமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்டட அனுமதி உள்பட எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாக நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணீயம் வேதனை
தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பிறகு சட்டவிரோத கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகஸ்ட் 27ம் தேதி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சென்னை செனாய்நகரில் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. லட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி மாநகராட்சி ஊழல் கண்காணிப்புப் பிரிவு செயல்பாடு பற்றி அறிக்கை தரவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரம் குறித்தும், உத்தரவாதம் அளித்தும் சொத்து வரி வசூலிக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றியும் ஊழல் செய்த அதிகாரிகளின் மீது பதிவான வழக்கு, ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை தேவை என்பன பற்றியும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...