வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வடக்கு, மத்திய வங்கக்கடல், அந்தமான்
கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் மையம் தெரிவித்துள்ளது.