விமர்சிப்பது எளிது: மவுனம் கலைத்தார் தலைமை நீதிபதி

ஒரு அமைப்பை விமர்சனம் செய்வது எளிது. ஆனால்,
அதனை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைப்பது கடினம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.*

*கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் 4 பேர் நிருபர்களை சந்தித்து, முக்கிய வழக்குகள் இளம் நீதிபதிகளுக்கு தான் ஒதுக்கப்படுகின்றன.*

*ஜனநாயகத்தில் நெருக்கடி உள்ளதாக கூறி தலைமை நீதிபதி குறித்து புகார் கூறினார். இது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா எதுவும் கூறவில்லை*

*இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேசிய கொடி ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:-*

*ஒரு அமைப்பை விமர்சிப்பது, அழிப்பது, தாக்கி பேசுவது என்பது எளிது. ஆனால், அந்த அமைப்பை சரியான பாதையில் மாற்றுவதும், சிறப்பாக செயல்பட வைப்பதும் கடினம். நாட்டின் நீதித்துறையை பாதுகாக்க, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும். நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...