51 படிப்புகளில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி அனுமதி: சென்னைப் பல்கலை. அறிவிப்பு !!

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த 51 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அனுமதி அளித்துள்ளது என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீநிவாசன் புதன்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பு.


யுஜிசி-யின் தொலைநிலைக் கல்வி ஒழுங்குமுறை 2017' என்ற படிவத்தின்படி, நாட்டில் உள்ள ஒருசில பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்த முடியும். அதில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று.


இந்தப் புதிய நடைமுறையின்படி, சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் மூலம் வழங்கப்படும் 51 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அனுமதி வழங்க யுஜிசி-யிடம் விண்ணப்பிக்கப்பட்டது.


அதில், 3 படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி அளித்தது. மற்ற படிப்புகளுக்கு சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் அனுமதி அளிக்கப்படும் என யுஜிசி அறிவுறுத்தியது.


அதன்படி, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு யுஜிசி-யிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது*

 *எனவே, இன்னும் ஒரு வாரத்தில் மற்ற படிப்புகளுக்கும் அனுமதி கிடைத்து விடும் என நம்புவதாக பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...