முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில், 77 சதவீத இடங்கள்
காலியாக உள்ளதாக, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது*
*அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., மற்றும் பி.டெக்., முடிக்கும் மாணவர்கள், எம்.இ., - எம்.டெக்., போன்ற, முதுநிலை இன்ஜி., படிப்பில் சேர வேண்டும் எனில், தமிழக அரசின், 'டான்செட்' பொது நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்*
*இல்லையெனில், மத்திய அரசின், 'கேட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்*
*இந்த ஆண்டு நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, ஆக., 28 முதல், 31 வரை*
*அண்ணா பல்கலை சார்பில், முதுநிலை* *படிப்பிற்கான கவுன்சிலிங் நடந்தது*
*🔶🔶கவுன்சிலிங்*
*இதில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு, கவுன்சிலிங் நடத்தப்பட்டது*
*அண்ணா பல்கலையின், நான்கு வளாக கல்லுாரிகள், ஐந்து உறுப்பு கல்லுாரிகள், ஆறு அரசு கல்லுாரிகள், ஒரு மத்திய அரசு கல்லுாரி உட்பட, மொத்தம், 332 கல்லுாரிகளில், 16 ஆயிரத்து, 728 இடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது*
*இதற்கு, 6,736 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 3,891 பேர் மட்டுமே, முதுநிலை படிப்புகளை தேர்வு செய்தனர்*
*12 ஆயிரத்து, 837 இடங்கள் மாணவர்கள் சேராமல், காலியாக உள்ளன. அதாவது, 23 சதவீத இடங்களே நிரம்பின; 77 சதவீத இடங்கள் நிரம்பவில்லை*
*2017 - 18ம் கல்வி ஆண்டில், 3,463 பேர் முதுநிலை இன்ஜி., படிப்பில் சேர்ந்தனர். இந்த ஆண்டு, அதை விட, 428 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்*
*🔶🔶சிப்பெட்*
*அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரியில், 93; கிண்டி இன்ஜி., கல்லுாரி, 239; குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி, 189 மற்றும் திட்டமிடல் மற்றும் கட்டடவியல் கல்லுாரி, ஓர் இடம் என, அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளிலேயே, 522 இடங்கள் காலியாக உள்ளன*
*சிப்பெட்' எனப்படும், மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்லுாரியில், 11 இடங்கள் காலியாக உள்ளன*
*தனியார் கல்லுாரிகளை பொறுத்தவரை, பல கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட சேராத நிலை உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்*