இளம் விஞ்ஞானி விருது பெற்ற தொழிலாளி மகன் : தேசிய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க ஆர்வம்

பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே 3 முறை இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்
, புதுடெல்லியில் நடக்கும் தேசிய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்திடுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்*


*தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளி அருகே நல்லாம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (45). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சக்திவேல் (16). தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்*


*இவருக்கு அறிவியல் கண்டுபிடிப்பில் அதீத ஆர்வம் உண்டு. ஆறாம் வகுப்பு முதலே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வந்தார்*


 *அப்போது, சூரிய ஒளியிலிருந்து செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் நூதன முறையை கண்டுபிடித்தார்*


*அவரது செயல்பாடுகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் அப்பகுதி மக்கள் பார்வையிட்டு சக்திவேலை பாராட்டி வந்தனர்*


 *அதுமட்டுமின்றி, பள்ளிகளில் நடந்த பேச்சுப்போட்டியிலும், மாநில அளவிலான ஓவியப்போட்டிகளிலும் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார்*


 *தமிழ்நாடு அறிவியல் கழகம் நடத்திய இளம் விஞ்ஞானி விருதை மூன்று முறை பெற்றுள்ள மாணவர் சக்திவேல், இந்த ஆண்டு சென்னையில் நடந்த ‘உங்களில் யார் அப்துல்கலாம்2018’ விருதையும், மாநில அளவிலான ஓவிய, பேச்சுப்போட்டியில் விருது பெற்று சாதனை படைத்துள்ளார்*


 *போதுமான வசதியில்லாததால் கிராமத்திற்குள்ளேயே அவர் முடங்கி கிடக்கும் அவலநிலை உள்ளது*


*தற்போது மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்புவதை தானே கண்டறியும் படகை கண்டுபிடித்து அதை மாவட்ட கலெக்டர் முன் செய்து காண்பித்து பாராட்டு பெற்றார்*


 *மேலும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று கலெக்டராக வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு உள்ளது*


 *புதுடெல்லியில், இந்திய அறிவியல் கழகம் நடத்தும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளார்*


 *அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் சக்திவேலுக்கு, தன்னார்வலர்கள் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்*

*SOURCE DINAKARAN WEBSITE*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...