ரூ.96 ஆயிரம் கொடுத்தால் ஓய்வுப்பலன்? எம்.டி.சி., ஓட்டுனர் பயிற்சியாளர் அதிரடி

சென்னை : மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய, ஓட்டுனர் பயிற்சியாளரிடம்,
ஓய்வு பெறும் நாளில், '96 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான், பணப்பலன்களை வழங்குவோம்' என, அதிகாரிகள் கேட்டதாக வெளியான தகவலால், சர்ச்சை எழுந்துள்ளது.



சென்னை மாநகர போக்குவரத்துக் கழக, வியாசர்பாடி பணிமனையில், ஓட்டுனர் பயிற்சி
யாளராக பணியாற்றியவர், ராஜேந்திரன். இவர், உடல்நலக்குறைவு காரணமாக, 2015 முதல், இரண்டாண்டுகள் பணிக்கு செல்லவில்லை. இந்தாண்டு துவக்கத்தில், மருத்துவ அறிக்கை சமர்ப்பித்து, மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். ஏற்கனவே பணிக்கு வராத நாட்களை, 'நோ ஒர்க் - நோ பே' என்ற அடிப்படையில், பணி மூப்பில் இருந்து கழித்துவிட்டனர்.


இந்நிலையில் நேற்று, அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், 'நீங்கள், தகுந்த காரணங்களின்றி, நீண்ட நாட்கள் பணிக்கு வராததால், உங்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்விலிருந்து, மூன்று மடங்கு தொகையான, 96 ஆயிரம் ரூபாயை செலுத்தினால், ஓய்வு காலப் பலன்களை வழங்குவோம்' என, அதிகாரிகள் கூறினர். இதனால், ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.


இதுகுறித்து, சக ஊழியர்கள் கூறியதாவது: ராஜேந்திரன், நீண்ட காலம் பணிக்கு வராததற்கான காரணத்தை, மருத்துவச் சான்று வழியாக வழங்கி உள்ளார். அவர் பணிக்கு வராத நாட்களில், குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது என்றும், அதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும், பொய் வாதம். இது, அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவு. மேலும், 'நோ ஒர்க் - நோ பே' என்ற அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டால், அதன் பின், தண்டனை வழங்கக்கூடாது என்பது விதி. அவ்வாறு இருந்தும், அதிகாரிகள் விதிகளை மீறுவது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...