ஆச்சர்யப்படுத்தும் அரசு ஊழியர்!.

சிவகாசி 10 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் சி
வகாசி நகராட்சி ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் தவிர தற்செயல்விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு என பல வழிமுறை உண்டு. இவ்வளவு விடுமுறை இருந்தாலும் அரசு ஊழியர் ஒருவர்

பத்து ஆண்டுகளாக எடுக்காமல் வேலை பார்க்கிறார்.



சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவர்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ், 45. சிவகாசி நகராட்சி அலுவலக உதவியாளராக 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். திருமணம் உள்ளிட்ட எதற்காகவும் இவர் இதுவரை விடுப்பு எடுத்ததில்லை.முத்துராஜ் கூறுகையில், ''பணியில் மேல் உள்ள ஆர்வம், ஈடுபாட்டில் விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறேன்.


அதிகாரிகள், பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற வைராக்கியம், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்குவதால் விசுவாசத்தோடு உழைக்க வேண்டும் என்ற நோக்கில் விடுமுறை எடுப்பதில்லை. இனியும் விடுமுறை எடுக்காமல் மக்களுக்காக பணியாற்றுவேன்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...