1.1.2004 க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட மற்றும் பணிநிரந்தரம் செய்யப்பட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும், வீட்டு வாடகைப்படியை 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும், MACP க்கு உயர்த்தப்பட்ட தகுதியை ரத்து செய்ய வேண்டும், 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும்,
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பஜன்கோவா, புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம், புதுச்சேரி மின்திறல் குழுமம், அங்கன்வாடி, பாப்ஸ்கோ, பாலிடெக்னிக் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி, பொதுத்துறைமற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கும் 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 7வது ஊழியக்குழு அமல்படுத்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலுவை தொகைகளை வழங்க வேண்டும், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதாமாதம் சம்பள வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும்,
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் சார்பாக காரைக்கால் நிலையத்திலிருந்து கடற்கரை சாலை வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது, கண்டன பேரணிக்கு சம்மேளன தலைவர் *சுப்ரமணியன்* தலைமை வகித்தார், கௌரவ தலைவர்கள் *ஜார்ஜ், ஜெய்சிங்*, ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் *காளிதாஸ்* ஆகியோர் முன்னிலை வகித்தனர், சம்மேளன பொதுச் செயலாளர் *ஷேக் அலாவுதீன்* நன்றி கூறினார்.
பேரணியில் சம்மேளனபொருளாளர் மயில்வாகனன், துணை தலைவர்கள் அய்யப்பன், சுப்புராஜ், சிவகுமார், தமிழ்வாணன், வசந்தி, இணை பொதுச் செயலாளர்கள் ஜோதிபாசு, கலைச்செல்வம், செயலாளர்கள் தனசேகரன், முஹம்மது அப்துல் காதர், ரஞ்சித், கல்யாணசுந்தரம், அலுவலக செயலாளர் புகழேந்தி, மற்றும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனம், PRTC ஊழியர் சங்கம், PAJANCOA ஊழியர் சங்கம், PPCL ஊழியர் சங்கம், அங்கன்வாடி ஊழியர் சங்கம், ரொட்டிப்பால் ஊழியர் சங்கம், பல்நோக்கு உதவியாளர் ஊழியர் சங்கம், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர் சங்கம், சுகாதார துறை ஊழியர் சங்கம், ஓட்டுனர் சங்கம்,தினக்கூலி ஊழியர் சங்கம், ஆவண காப்பக சங்கம், மார்க்கெட்டிங் கமிட்டி சங்கம், தீயணைப்பு ஊழியர்கள் சங்கம், வட்டார வளர்ச்சி அலுவலக தொகுப்பூதிய. ஊழியர்கள் சங்கம், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம், ITI ஆசிரியர் ஊழியர் சங்கம், பாப்ஸ்கோ ஊழியர் சங்கம், ஆசிரியர் கூட்டமைப்பு, பொதுப்பணித்துறை ஊழியர் கூட்டமைப்பு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
