வயிற்று புண், அல்சர் ஏற்பட என்ன காரணம்..! முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும்...!!


இன்றைய நிலையில் மாணவர்களை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்குவது அல்சர் தான்.

அல்சர் ஏற்பட காரணங்கள்

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும்.

அதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் தான் அல்சர்.
1. மன அழுத்தம் (எந்த வகையில் ஏற்பட்டாலும் சரி).
2 தவறான உணவு பழக்கவழக்கங்கள் (தாமதமாக சாப்பிடுதல், செய்கை குளிர்பானம், துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு)
3. மதுவகைகள், புகைப்பிடித்தல், வெற்றிலைபாக்கு, புகையிலை.
4. ஆங்கில மருந்துகளை அடிக்கடி சாப்பிடுவது.
5. ஐஸ்கிரீம், சாக்லேட், அதிகமாக பால் மற்றும் தயிர், மோர் சாப்பிடுவது.
6. புளிப்பு தன்மையுள்ள பழங்களை அதிகளவில் சாப்பிடுவது(திராட்சை, கமலா, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலும்பிச்சை, பப்பாளி, ஊறுகாய், அன்னாசி)
குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?


हमें यह पसंद है।❤️❤️❤️We Like एक ऐसी सोशल मीडिया ऐप है जो आपको अपनी पसंद की......
AD
WeLike : लघु वीडियो क्लिप्स और चर्चित विषय
Learn More
1. சத்தான சரிவிகித உணவு.
2. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
3. காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
4. வயிற்றில் கோளாறை உண்டுபண்ணும் உணவு எனத் தெரிந்தால் அவற்றை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டும்.
5. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன மிகவும் நன்மை பயக்கும்.
6. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன. ஆகவே அதிக அளவில் இவைகளைச் சாப்பிடலாம்.
7. பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...