பாலியல் தொந்தரவு: மூன்று ஆண்டுகள் சிறை!


பெண் பயணிகளுக்கு ரயிலில் பாலியல் தொந்தரவு செய்தால் மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்க மத்திய அரசுக்கு ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

சமீப காலமாக ரயில்களில் பயணம் செய்யும் பெண்களை கமெண்ட் பண்ணுவது, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு தற்போதுள்ள ரயில்வே சட்டப்படி, அதிகபட்சமாக ஒராண்டு சிறை தண்டனைதான் கிடைக்கும். சமீபத்தில் ராஜ்ய சபாவில், ரயில்வே அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 2014- 2016 காலகட்டத்தில், ரயிலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2014இல் 448 வழக்குகளும், 2015இல் 553, 2016இல் 606 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தனர். இதன்படி, திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: "ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அதனை கடுமையாக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை செய்துள்ளோம். அதன்படி, பெண் பயணிகளுக்குப் பாலியல் தொல்லை, ஈவ்டீசிங் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கும்படி பரிந்துரை செய்துள்ளோம். ஒவ்வொரு முறையும், பெண்களுக்கு இடையூறு ஏற்படும்போது, ரயில்வே போலீஸாரையே நாங்கள் நாட வேண்டியது உள்ளது. இந்தப் புதிய பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், நாங்களே நடவடிக்கை எடுக்க முடியும்.

பெண்கள் மட்டுமே பயணம் செய்யும் பெட்டியில் செல்லும் ஆண்களுக்கும், மின்னணு முறையில் டிக்கெட் பதிவு செய்வதில் முறைகேடு செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளோம்" எனக் கூறினார்.

இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பிறகு அமலுக்கு வரும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...