புதிய வகுப்பறை கட்டித்தருகிறோம் எனக்கூறி பழையகட்டிடத்தையும் அடுத்த அவலம்... 4 ஆண்டுகளாக மரத்தடி தான் வகுப்பறை...!!

சின்ன சேலம் ,விழுப்புரம் மாவட்டம்
எங்கள் பைத்தந்துறை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில் சுமார் 150 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் மற்றும் 5 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு கடந்த 2014 - 2015 ஆம் கல்வி ஆண்டில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 2 இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் 4 வகுப்பறைகள் இடிக்கப்பட்டன. அதன் பின் 4 ஆண்டுகளாக மாற்று கட்டிடங்கள் கட்டப்படவில்லை. அதற்காக எத்தனையோ மனுக்கள் பள்ளி மற்றும் கிராம பொது மக்கள் சார்பாக அளிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த கல்வியாண்டிலும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்பொழுது ஒரு இரண்டு வகுப்பறை கட்டிடமும், ஒரு தலைமை ஆசிரியர் கட்டிடமும் என மூன்று வகுப்பறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள இரண்டு வகுப்புகள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே தொலைவில் உள்ள சமுதாயக் கூடம் மற்றும் நூலகக் கட்டிடத்தில் நடைபெறுகின்றன. இவ்வாறாக பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் சென்று சுமார் 70 மாணவர்கள் கல்வி பயில்வதால் அவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.எனவே தாங்கள் உடனடியாக எங்கள் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...