முதல் டி20: ஆஸ்திரேலியா-விடம் மண்ணை கவ்விய இந்தியா; 4 ரன்களில் தோல்வி!


ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முதலில் நிதானமாக ஆடினாலும், நடுகட்டத்தில் இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். அந்த அணியின் க்ரிஸ் லின் 37 ரன்கள் அடிக்க, மேக்ஸ்வெல் 46 ரன்களும், ஸ்டோனிஸ் 33 ரன்களும் எடுத்தனர்.

மழையால் ஆட்டம் தடைபட்டதால், முதல் இன்னிங்ஸ் 17 ஓவர்களில் முடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

அடுத்து, டக்வர்த் லூயீஸ் முறைப்படி, இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 7 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். எனினும், மற்றொரு முனையில் ஷிகார் தவான் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சரமாரியாக சிதறடித்து நம்பிக்கை தந்தார். ராகுல் 13, கேப்டன் கோலி 4, ஷிகார் தவான் 76 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், இறுதியில் ரிஷப் பந்த்-தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடி காட்டியது. கடைசியில் இருவருமே பொறுப்பில்லாமல் சொதப்ப, இந்திய அணி 17 ஓவர்களில் வெறும் 169-7 ரன்கள் எடுத்து படுதோல்வி அடைந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...