இந்தியாவைக் கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணால் பார்க்கலாம். இன்று (19.03.2019, செவ்வாய்) மாலை சரியாக 6.42 மணிக்கு தெற்கு-தென்மேற்கு திசையில் 11° -இல் இது தெரிய தொடங்கும். வடகிழக்கு திசையில் 12°-இல் புவியில் நிழலில் மறைந்து விடும். 6 நிமிடங்கள் இதை காணலாம். சூரிய ஒளிபடுவதால் பிரகாசமான நட்சத்திரம் போலவும், வேகமாக நகரும் விமானம் போலவும் தெரியும்.
4,19,455 Kg எடையுடன் மணிக்கு 27,600 கி.மீ வேகத்தில் 400 கி.மீ உயரத்தில் 92 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வருகிறது. எனினும் காலை 5.00 மணிக்கு மேலும் மாலை 7.00 மணிக்குள்ளும் வெளிச்சமில்லாத நேரத்தில் மட்டுமே காண முடியும். நாசாவின் வலைத்தளத்தில் இந்த நிலையத்தை காணும் நேரத்தை அறியலாம்.
தற்சமயம் Anne McClain(USA), Oleg Kononenko(Russia), David Saint-Jacques(Canada), Alexey Ovchinin(Russia), Nick Hague(USA), Christina Koch(USA), ஆகிய 6 விண்வெளி வீரர்கள் இதில் தங்கி எடையற்ற, புவியீர்ப்பு விசையற்ற நிலையில் மருத்துவம், இயற்பியல், உயிரியல், வானவியல், வானியல் தொடர்பான பற்பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு குழுமணி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாலசரவணன் தெரிவித்துள்ளார்.