செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள்
வரும் 5ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. ஆனால், தற்போது நிலவும் வானிலை விஞ்ஞானிகளை பயமுறுத்தி வருகிறது. குமரி மாவட்டம் அருகே மையம் கொண்டுள்ள புயல் சற்று வலுவடையும் பட்சத்தில் இந்த விண்வெளி சோதனையை பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரூ. 450 கோடி செலவில் இந்தியா தனது சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது. மொத்தம் 200 மில்லியன் கி.மீ., பயணம் கொண்ட மங்கள்யான், திட்டமிடப்படி 5ம் தேதி ஏவப்பட்டால், வரும் 30ம் தேதி பூமியின் வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு, செவ்வாயை நோக்கி தனது நீண்ட பயணத்தை துவக்கும். அடுத்த 300 நாட்களில் செவ்வாயின் பாதை நெருங்கும் மங்கள்யான் அடுத்த சில தினங்களில் இருந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும். இதற்கான 56 .30 மணிநேர கவுன்டவுன் இன்று காலையில் 6. 08 மணிக்கு துவங்கியது. 

வரும் 5ம் தேதி விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மற்றும் செயற்கைகோளை கண்காணிக்க, இந்திய கடல் எல்லையில், யமுனா, நாலந்தா ஆகிய கப்பல்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சில இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 

எரிபொருள் நிரப்புதல், பேட்டரிகளை சோதனை செய்தல் உள்ளிட்ட இறுதி கட்ட ஏற்பாடுகள் துவங்கி உள்ள நிலையில், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறிப்பிட்ட நாளில் செயற்கைகோளை விண்வெளியில் ஏவும் விஷயத்தில் அச்சுறுத்தி வருகிறது. 

மங்கள்யான் பயணம் மங்களகரமாகுமா ? பொதுவாக, அதிகமான மழை, புயல் ஏற்படும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏவுகணை இஸ்ரோ ஏவுவதில்லை. வானிலை கோளாறு காரணமாக மங்கள்யான் செயற்கைகோளை ஏவுவதில் சிக்கல் ஏற்பட்டால், வரும் 19ம் தேதிக்குள் ஏவ வேண்டும். 19ம் தேதி கடந்தும் வானிலை சரியில்லை என்றால், செவ்வாய்க்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டம் மேலும் தள்ளிப்போகும். 

செவ்வாய்க்கு ராக்கெட் ஏவும் பணி ' தோஷம்'- இல்லாமல் முடிந்தால் இந்தியா மகிழ்ச்சி அடையும். 


இந்தியா 4வது நாடு :

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகிலேயே இந்த சாதனை பட்டியலில் இந்தியா 4 வது நாடு என்ற இடத்தை பிடிக்கும். இது வரை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியுள்ளது. இந்நாடுகள் மொத்தம் அனுப்பிய 51 விண்கலத்தில் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...