அரசியல்வாதிகளுக்கு தகுதித் தேர்வு எப்போது? ம.ராஜன், தேனி

ஜனநாயகத் தூண்களில் நீதித்துறை, பத்திரிகைத் துறை போன்றவற்றில் எல்லாம், நல்ல சீர்திருத்தங்கள் கொண்டு வந்து விட்டனர். சம்பந்தப்பட்ட துறைகளில் அங்கம் வகிக்கும் பணியாளர்களுக்கும், நெறிமுறைகளை கொண்டு வந்தாயிற்று.ஒரே ஒரு வர்க்கம் மட்டும், எந்த நெறிமுறை கட்டுப்பாடுகளுமின்றி, சர்வ வசதிகளை அனுபவித்து வருகிறது. அது,
அரசியல்வாதிக் கூட்டம் தான்.அரசியல்வாதி ஆவதற்கு, இந்த நாட்டில் என்ன தகுதியை வைத்துள்ளனர்? குறைந்த பட்சம், கல்வித் தகுதியையாவது நிர்ணயித்துள்ளனரா?தேர்தலில் ஜெயித்து, அமைச்சர் ஆனதும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட, தங்களை விட, கல்வியில் குறைந்த அமைச்சருக்கு கைகட்டி சேவகம் செய்யும் அவலம், இந்த ஜனநாயக நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.மக்கள் தலைவர் என்பவர், சாதாரண மக்கள் பெற்றிருக்கும் தகுதியை விட, கூடுதலான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளை பின்பற்ற வேண்டாமா?சாதாரண தமிழில் கையொப்பம் போட தடுமாறும், எம்.எல்.ஏ., - அமைச்சர், எம்.பி., தன் மெத்தப் படித்த, அந்தரங்க காரியதரிசிகளின் அத்துமீறிய போக்கால், நிர்வாகத் திறன் இழந்து, கெட்ட பெயர் வாங்குகின்றனர்.தற்போது, பிரபலமடைந்திருக்கும் சில எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் எல்லாம், ஒரு காலத்தில் கல்வியறிவு பெறாத அமைச்சர்களுக்கு, அந்தரங்க காரியதரிசிகளாக பணியாற்றியவர்கள் தான். அதனால் தான், அந்த காலத்தில் செய்த ஊழல் நடவடிக்கையை இன்று, தாம் பதவிக்கு வந்ததும், தொடரச் செய்கின்றனர். எனவே, அரசியல்வாதிகளுக்கும் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். அதற்கென, தனித்துவத்தை தேர்தல் ஆணையத்தால் அமைக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் சட்டம் என்பது, எல்லாருக்கும் பொதுவானது என்பதை, இதன் மூலம் நிரூபிக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...