உண்மை இதுவே !!!எதார்த்தமும் இதுவே!!!

இடைநிலை ஆசிரியர்களே!!! ஒரு வழியாக நீங்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக ஒரு வாரத்தில் ஒரு மாற்றம் என்ற தலைப்பில் உங்களை மூளை சலவை செய்தவர்கள் போல் உட்க்கார வைத்து வேடிக்கை பார்த்தது ஒரு  கூட்டம்,
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,இதே நிலைமையில் நம்மை உட்கார  வைத்து வேடிக்கை பார்ப்பார்கள் என்று நாங்கள் சொன்னாலும்,ஏதோ!!!  இவர்கள்  சங்க காழ்ப்புணர்ச்சியுடன் 

சொல்கிறார்கள் என்ற எண்ணத்தில்  நீங்கள் அனைவரும் நினைக்கறீர்கள்!!!
சிந்தனை செய்யுங்கள்!!!
ஏதோ, முதல்  அமைச்சர்  அவர்களே , அறிவித்தது போல பல்வேறு அறிவிப்புகளை  அறிவித்து " ஒரே வாரத்தில்  அவர்கள்  கைகளில் 2100 கோடி நிலுவை தொகையையும் மற்றும் ஊதியத்திற்கு 310 கோடி ரூபாய் கொடுத்து 2800 தர ஊதியத்திலுள்ள  இடைநிலை ஆசிரியர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள் என கூறியதைப்போல்   கூறிக்கொண்டு இருந்தனர் " இதே போல் ஒருமுறை மட்டுமல்ல,இருமுறை மட்டுமல்ல பலமுறை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக குறுஞ் செய்தி அனுப்பி உள்ளனர்.அதற்க்கான ஆதாரம்  உள்ளது. கடந்த 2012 மே மாதம் மாவட்ட பணி மாறுதல் கிடைத்துவிட்டது என்று குறுஞ் செய்தி அனுப்பி தவறான தகவல் பரப்பியவர்கள் யார் ???என்பது , நமது  உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும்.
9300 -4200 என்பது இப்போது புதிதாக கூறவில்லை.கடந்த ஆண்டே ,"என்னிடம் அரசாணையே உள்ளது என்று கூறிக்கொண்டிருந்தனர் என்பதும் , நம் அனைவருக்கும் தெரியும்.
இடைநிலை ஆசிரியர் பெருமக்களே!!! உண்மை நிலவரம் என்ன வென்றால் நாம் ஊதிய முரண்பாட்டினை களைவதற்கு மூன்றே வழிகள்தான் உள்ளன.
1* அரசாகவே,முன் வந்து நான்கு ஆண்டுகளாக நாம் பட்ட வேதனைகளை அறிந்து ஊதிய முரண்பாட்டை களைந்து கொடுப்பது.
2* ஒரே கோரிக்கையை மட்டும் கையில் ஏந்தி (இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் ) எல்லா ஆசிரியர் இயக்கங்களும் களம் காண்பது
3* உச்ச நீதிமன்றம் வரை சென்று ஊதிய முரண்பாட்டை சட்டப்படி விளக்கி குறைந்துள்ள ஊதியத்தை பெறுவது போன்றவை மட்டுமே.
நீங்கள் என்ன நினைத்தாலும் சரி , உண்மை இதுவே,எதார்த்தமும்    இதுவே. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...