SSTA இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!! வழக்கு எண்:4420/2014

*SSTA  சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

*இருப்பினும் ஒரு சில விசமிகளால், இடைநிலை ஆசிரிய இனம் இன்னும்

ஏமாறக்கூடாது என்ற நோக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன் கணக்கினை கனகச்சிதமாக, உண்மையை மூலதனமாக,மேலும் உச்சநீதிமன்ற அனுபவத்தை கொண்டு வெள்ளிக்கிழமையன்று கோர்ட் எண்:11 இல் வரிசை எண் :80 ஆக நீதியரசர்.திரு.சுப்பையா அவர்களிடம் விசாரணைக்கு வந்தது.

*மரியாதைக்குரிய அரசு வழக்கறிஞர் திரு.விஜயகுமார்  அவர்கள் ஆஜரானார்கள்.நம்முடைய சார்பில்   மூத்த மற்றும் பல கல்வித்துறை சமந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை  மனுதாரருக்கு பெற்றுத்தந்த  வழக்கறிஞர் திரு.செல்வராஜ் அவர்கள் ஆஜராகி வாதாடினார்.

*நீதியரசர் அரசின் நிலைப்பாடு என்ன?எனக் கேட்டபோது,இன்னும் இரண்டு வாரத்தில் அரசினை கலந்து பதில் மனு தாக்கல் செய்கிறோம் என சொல்லியதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் அவர்கள் , இரண்டுவாரம் வழக்கினை  ஒத்திவைத்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...