ஆபாச சினிமா பட போஸ்டர்களை பள்ளி சுற்றுச்சுவர்களில் ஒட்டுவது அதிகரிப்

ஆபாச சினிமா பட போஸ்டர்களை திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளின் சுற்றுச்சுவர்கள் மற்றும் எதிர்புற சுவர்களில்
ஒட்டுவது அதிகரித்துள்ளது.
ஆபாச சினிமா பட போஸ்டர்களை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலக காம்பவுண்ட் சுவர்களில் ஒட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. மீறி ஒட்டப்படும் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்வதோடு, அபராதம் மற்றும் உரிமத்தை ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால், ஆபாச சினிமா பட போஸ்டர்கள் ஒட்டப்படுவது ஓரளவு குறைந்திருந்தது.
தற்போது, நடவடிக்கை எடுப்பதில் கண்டுகொள்ளாத நிலை நீடிப்பதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளின் முன்புறம் உள்ள காம்பவுண்ட் சுவர்களை குறி வைத்து ஆபாச சினிமா பட போஸ்டர்களை ஒட்டுவது அதிகரித்துள்ளது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதோடு, பெற்றோர்கள் முகம் சுளிக்கின்றனர். இதை தவிர்க்க, ஆபாச சினிமா பட போஸ்டர்களை ஒட்டுபவர்கள் மீது மீண்டும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...