பயிற்சி மாணவியர் தற்கொலை முயற்சி: தடுத்தனர் வழக்கறிஞர்கள், போலீசார்

செவிலியர் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர், 43 பேர், சென்னை உயர்நீதிமன்ற, ஐந்து மாடி கட்டடத்தில் ஏறி, கீழே குதித்து தற்கொலை
செய்து கொள்வதாக, மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணை:

அரசு செவிலியர் பள்ளிகளில், செவிலியர் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர், தங்களுக்கு பணி வாய்ப்பு கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். விசாரணை, நேற்று நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக, தமிழகத்தின் பல பகுதி களைச் சேர்ந்த, செவிலியர் பயிற்சி பெற்ற, மாணவ, மாணவியர், நேற்று உயர்நீதிமன்றம் வந்தனர். விசாரணை நடந்து, தேதி குறிப்பிடப்படாமல், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதைக் கேட்ட, 42 மாணவியர், பகல், 12:00 மணியளவில், சென்னை உயர்நீதிமன்ற, வழக்கறிஞர் கட்டட வளாகம் சென்றனர். ஐந்து தளங்களை கொண்ட அந்த கட்டடத்தின், மொட்டை மாடி பகுதிக்கு வந்த அவர்கள் அனைவரும், அங்குள்ள கண்காணிப்பு கோபுர அமைப்பின் மீது ஏறி, கோரிக்கைகளை வலியுறுத்தி, உரத்த குரலில் கோஷம் எழுப்பினர்.

கீழே குதித்து:

திடீரென்று, கோஷம் ஒலித்ததால், திடுக்கிட்டு வழக்கறிஞர்கள் பார்த்தபோது, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கீழே குதித்து, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் குவிக்கப்பட்டனர். போலீசாரும், வழக்கறிஞர்களும், போராட்டம் நடத்தியவர்களை, கீழே இறங்கி வருமாறு கேட்டும், மறுத்து விட்டனர்.

இந்நிலையில் தீயணைப்புத்துறையினர், கீழ் தளத்தில் பெரிய வலையை கட்டி, பாதுகாப்பாக பிடித்து நின்றனர்; 108 வாகனமும் நிறுத்தப்பட்டது. நேரம் ஆக ஆக, அந்த பகுதியில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், போலீசார் குவிந்ததால், மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு அரண்:

இந்நிலையில் வழக்கறிஞர்கள் சிலர், துணிச்சலாக மேலே ஏறி, போராட்டக் குழுவினரிடம், பேச்சு நடத்தினர்; அப்போதும், அவர்கள் இறங்கி வர மறுத்தனர். மற்ற வழக்கறிஞர்களும் மாடிக்கு சென்று, பயிற்சியாளர்கள் யாரும் கீழே குதிக்காத வண்ணம் பாதுகாப்பு அரண் அமைத்தனர். போலீஸ் உயரதிகாரிகள் விரைந்து, பயிற்சியாளர்களிடம் பேச்சு நடத்தி, அவர்களை கீழே அழைத்து வந்து, எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கவுன்சலிங் நடந்தது.

பொத்தல் விழுந்த வலை



* கட்டடத்தின் உச்சியில் இருந்து, இரு பெண்கள் மட்டும், துணிச்சலாக குதிக்க முற்பட்டனர். அவர்களை, வழக்கறிஞர்கள் காப்பாற்றினர்.

* செவிலியர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து, போலீஸ் உயரதிகாரிகள் பலரும் உயர்நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். ஆனால், யாருமே போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தவில்லை. வழக்கறிஞர்கள் மட்டுமே, அவர்களின் கோரிக்கைகளை கேட்டனர்.

* பகல், 12:00 மணிக்கு, மாடிக்கு சென்ற போராட்டக்காரர்கள், மதியம், 2:30 மணி வரை, அங்கேயே இருந்தனர். இவர்களில் நான்கு பேர், கர்ப்பிணிகள், இரண்டு பேர் மாற்றுத் திறனாளிகள். வெயில் அதிகம் இருந்ததால், இவர்களில், மூன்று பேர் மயக்கம் அடைந்தனர்.

* ஒரு வழியாக எல்லாரையும் போலீசார் மீட்டு அழைத்து வந்தபோது, சில மாணவியரை அங்கிருந்த சிலர் தாக்கினர்.

* வழக்கறிஞர்களுக்கான சேம்பர் கட்டடத்தில் ஏறி, தற்கொலைக்கு முயற்சி நடந்ததால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என்றும், உயர்நீதிமன்றத்துக்குள் வருபவர்களை, போலீசார் முறையாக சோதனையிடவில்லை என்றும் தெரிவித்த வழக்கறிஞர்கள், பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீசாரை திட்டினர். போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளும் நடந்தது.

* இந்த சம்பவத்தில் தீயணைப்புத் துறையினர் மிகவும் சொதப்பலாக நடந்து கொண்டனர். மேலிருந்து கீழே விழுந்தால் அவர்களை பிடிக்கும் வகையில் வலை ஒன்றை தீயணைப்புத் துறையினர் கொண்டு வந்தனர். அந்த வலையை, மிகவும் குறைவான உயரத்தில் அவர்கள் பிடித்திருந்தனர். அது, யார் விழுந்தாலும், காப்பாற்ற இயலாத நிலையில், கிழிந்து காணப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...