பணியின் போது உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

பணியின் போது உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் பிரிவு மின்சார வாரிய பணியாளர் பச்சியப்பன், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தைச் சேர்ந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் அன்பரசன், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பிரிவு மின்வாரிய கள உதவியாளர் முருகன், வேலூர் மாவட்டம் மோர்தானா கிராம பஞ்சாயத்து பம்ப் ஆப்பரேட்டர் ஆறுமுகம் ஆகியோர் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
மேலும், காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் மாரடைப்பாலும், சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் டாஸ்மாக் விற்பனையாளர் எம்.குமார் மர்ம நபர்களால் தாக்கப்பட்டும், விழுப்புரம் மாவட்டம் வனக்காவலர் கோவிந்தசாமி, வாகனம் மோதியும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த இந்த 7 பேரின் குடும்பங்களுக்கும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...