சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வார இறுதியில் வெளியீடு?


CBSE பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடந்தது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை
13 லட்சத்து 28 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வை 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்சி தேர்வுகள் முடிந்து, 2 மாதங்கள் அல்லது 45 நாட்களுக்கு பிறகு தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தன.ஆனால், இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு, விடைத்தாள் திருத்துவதில் குழப்பம் ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தென் மண்டலத்துக்கான தேர்வு முடிகள் மே 27 மற்றும் 28ம் தேதிகளில் வெளியானது.இந்த ஆண்டும் அது போலவே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரமே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...