இன்று மின்கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகும்

மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
(கேஇஆர்சி)முடிவு செய்துள்ளது.
கர்நாடகத்தில் இயங்கிவரும் மின்சார வழங்கல் நிறுவனங்கள்(எஸ்காம்கள்)மின்கட்டணத்தை ஒருயூனிட்டுக்கு 66 பைசா அளவுக்கு உயர்த்துமாறு கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கை மனுவின் அடிப்படையில்மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மின் நுகர்வோரின் கருத்துகளை ஆணைய உறுப்பினர்கள் கேட்டறிந்துள்ளனர். மேலும் மின் கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து கர்நாடக மின்பகிர்மானக்கழகம்(கேபிசிடிஎல்), மின்வழங்கல் நிறுவனங்களின் கருத்துகளை கேட்டறிந்துள்ளது. இதனடிப்படையில் மின்கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்பை மார்ச் மாதத்தில் வெளியிட ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் தனது முடிவை அப்போது தள்ளிவைத்த ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணஉயர்வு குறித்த அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட முடிவு செய்துள்ளது.
முந்தைய பாஜக ஆட்சியில் பெங்களூரு மின்வழங்கல் நிறுவனத்திற்கு(பெஸ்காம்)மட்டும் மின்கட்டண மானியமாக ரூ.1539 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் அதை நிறைவேற்ற அப்போதைய அரசு தவறிவிட்டதாக பெஸ்காம் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், மின்கட்டண உயர்வு ஒரு யூனிட்டுக்கு 21 முதல் 23 பைசாவாக இருக்கும் என்று ஒழுங்குமுறை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து பெஸ்காம் மேலாண் இயக்குநர் பங்கஜ்குமார் பாண்டே கூறியது: நிகழாண்டில் குறுகியகால மின் கொள்முதலுக்கு ஏராளமாக செலவிட வேண்டியுள்ளது. பெஸ்காமுக்கு பாக்கிவைத்துள்ள ரூ.1539 கோடியை வழங்க மாநில அரசு மறுத்துவிட்டது. எனவே, மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டால், இந்த செலவை ஈடுசெய்ய முடியும் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்றார் அவர்.
2013-இல் எஸ்காம்கள் ஒருயூனிட்டுக்கு 70 பைசா உயர்த்துமாறு கேட்டக்கொண்டதில், ஒழுங்குமுறை ஆணையம் ஒருயூனிட்டுக்கு 23 பைசா உயர்த்தியது. 2012-இல் 73 பைசா உயர்த்த கோரியதற்கு 13 பைசா உயர்த்தியது. 2011-இல் 88 பைசா உயர்த்த கேட்டதற்கு ஒழுங்குமுறை ஆணையம் 28 பைசா உயர்த்தியிருந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...