மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.


(ஒரு வாரத்திற்கு முன்பே sms  மூலம் தெரிவித்தது SSTA)
மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அது போல், ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தையின் கல்விச் செலவுத் தொகையை திருப்பி கொடுப்பதற்கான ஆண்டு உச்சவரம்பு தொகை, 24 ஆயிரம் ரூபாயிலிருந்து, 36 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 100 சதவீதமாக உயர்த்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல், இறுதிகட்டத்தை நெருங்க, இன்னும், நான்கு நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறை களுக்கு எதிரானது என, எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...