ஏழை மாணவரின் மருத்துவப் படிப்புக்கு உதவ வேண்டுகோள்

அரூர் அடுத்த எச். ஈச்சம்பாடியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு அஜித்குமார், அசோக்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த 13 ஆண்டுக்கு முன் செல்வமும், மாதம்மாளும் பிரிந்து
சென்றனர். தனது குழந்தைகளை மாதம்மாள் கூலி வேலை செய்து படிக்க வைத்தார். நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் இவரது மகன் அஜித்குமார் 1,148 மதிப்பெண் பெற்றார். இவருக்கு தற்போது வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ளது.

மாதம்மாள் தனது மகனில் மருத்துவ படிப்பிற்கு கட்டணம் உள்ளிட்டவை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். ஏழ்மை நிலையிலும் நன்கு படித்து மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ள தனது மகன் அஜித்குமார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க அரசு அல்லது நல்ல உள்ளம் கொண்டோர் உதவி புரிய 80986 52303 என்ற மொஃபைல் போனில் தொடர்பு கொள்ளுமாறு மாதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...