துணை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வில் இதுவரை 1289 இடங்கள் நிரம்பியுள்ளன.
இரண்டாம் நாளான
புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 5,719 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
பி.எஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி. (பேச்சுப் பயிற்சி படிப்பு), பிபிடி (பிஸியோதெரப்பி), பிஓடி (ஆக்குபேஷனல் தெரப்பி), பி.எஸ்சி ரேடியாலஜி - இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரப்பி டெக்னாலஜி, பி.எஸ்சி.கார்டியோ பல்மோனரி பர்ஃப்யூஷன் டெக்னாலஜி (இதய- நுரையீரல் கருவி தொழில்நுட்பப் படிப்பு) ஆகிய எட்டு படிப்புகளுக்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) தொடங்கியது.
முதல் நாள் கலந்தாய்வின் முடிவில் 632 இடங்கள் நிரம்பின. இரண்டாவது நாளில் 657 இடங்கள் நிரம்பின. இவற்றில் பெரும்பாலான அரசு இடங்கள் பூர்த்தியாகிவிட்டன. அரசு கல்லூரிகளில் வெறும் ஐந்து இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
காலை 9 மணி, 11 மணி பிற்பகல் 2 மணி என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். ஒவ்வொரு நாளும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதல் கட்டக் கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்