ஐ.ஏ.எஸ். அதிகாரி சுவரன்சிங் மனைவி ஷாஷி உள்பட 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது; 4-ந் தேதி ஜனாதிபதி வழங்குகிறார்

மத்திய
மனித வளத்துறை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-ம் ஆண்டுக்கான தேசிய
விருதுகளை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 22 ஆசிரியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 4-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

சென்னையில் விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஷாஷி சுவரன்சிங் தேசிய விருது பெறுகிறார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுவரன்சிங் மனைவி ஆவார்.

ஷாஷி ஏற்கனவே கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரியாக பணியாற்றியவர். முதுநிலை பட்டதாரி ஆசிரியராக சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

சென்னை ராயபுரம் புனித அன்னாள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டி.ஆரோக்கிய மேரி, ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.கஸ்தூரி, சவுகார்பேட்டை எம்.எப்.எஸ்.டி. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஆதியப்பன் உள்பட மொத்தம் 22 ஆசிரியர்கள் தேசிய விருது பெறுகிறார்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...