வாழ்க்கை தேடி !!!விடிய விடிய போராட்டம் !!!!வெயிட்டேஐ் முறையால் வேதனையில் ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

மாலை 5 மணி வரை மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, போராட்டத்தைக் கைவிடக்கோரி, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் போராட்டத்தைக் கைவிட போராட்டக்காரர்கள் மறுத்ததால், அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.இதனையடுத்து அவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, பணி வழங்க வேண்டும் என்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.புதிய அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12-ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என்கிற ரீதியில் மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன.இந்த முறையால், தகுதித்தேர்வில் 90-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பதவி வழங்‌கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...