கால அளவு மேலும் ஓராண்டு நீட்டிப்பு: ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி எப்போது தொடங்கும்

ரேஷன் அட்டைகளின் கால அளவை மேலும் ஓராண்டு நீட்டிப்பதற்காக, அவற்றில் உள்தாள் ஒட்டும் பணியைத் தொடங்குவதற்கான
உத்தரவுக்காக அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

2001–ம் ஆண்டு அட்டைகள்
கடந்த 2001–ம் ஆண்டு புதிய ரேஷன் அட்டைகள் தரப்பட்டன. அவற்றின் கால அளவு முடிந்த பின்னர் புதிய அட்டை தரப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டி ரேஷன் அட்டையில் கால அளவு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு டிசம்பரில் ரேஷன் அட்டைகளில் கால அளவு முடிகிறது. எனவே உள்தாள் ஒட்டி அதன் கால அளவு நீட்டிக்கப்படுமா? அல்லது மாற்று ஏற்பாடு எதாவது அரசிடம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்மார்ட் அட்டைகள்
சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டசபையில், உள்தாள் ஒட்டுவதற்கு பதிலாக, புதிய ரேஷன் அட்டைகளை அரசு தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ‘‘ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு பணி 100 சதவீதம் முடிந்தால்தான் ஸ்மார்ட் அட்டைகள் தரப்படும். ஆனால் 73 சதவீத பணிகள்தான் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் டிசம்பரில் முடிந்துவிடும். அதன் பிறகு ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும்’’ என்றார்.

அறிகுறியே இல்லை
தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 96 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றுக்கு இணையாக ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஸ்மார்ட் அட்டைகளை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கியதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.

அவற்றை டெண்டர் மூலமாக தயாரிக்க வேண்டுமா? அல்லது எந்த வகையில் ஸ்மார்ட் அட்டைகளை தயாரிக்க முடியும்? என்ற அதிகாரிகளின் ஆலோசனை நடைபெற்றது. முதல்–அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்று, அதுதொடர்பாக இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

உள்தாள் ஒட்டப்படுமா?
மேலும், சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் குளறுபடிகள் நேரிட்டு, அதனால் பெருமளவிலான மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாம் என்ற அரசியல் ரீதியான ஆலோசனையும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலையில் ஸ்மார்ட் அட்டைகளைப் பற்றி ஒரு முடிவு எடுக்கப்படாத நிலையில், உள்தாள் ஒட்டி ரேஷன் அட்டைகளை மேலும் ஒரு ஆண்டுக்கு கால நீட்டிப்பு செய்யும் நிலைதான் அதிகபட்சம் இருக்கும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

புதிய தகவல் பதிவு
ஆனாலும் அதுபற்றி தங்களுக்கு எந்த உத்தரவுகளும் இதுவரை வரவில்லை என்றும் அவர்கள் கூறினர். தற்போதைய ரேஷன் அட்டையின் வயது 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அட்டைதாரர் பற்றிய புதிய தகவல்களை பதிவு செய்வதற்கான உத்தரவுகளும் வரக்கூடும் என்றும் தெரிகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...