ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது:–
நீதிபதிகள் சிரமமான ஒரு பணியை செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகமான வழக்குகளை கையாளுகின்றனர். அதில், சில வழக்குகளுக்கு சாதகமாகவும், சில வழக்குகளுக்கு பாதகமாகவும் அவர்கள் முடிவெடுக்கலாம். ஒரு வழக்கின் தீர்ப்பின் மூலம் அனைவரையும் சந்தோஷப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். அதேநேரம், நீதிபதிகளின் தீர்ப்பை குற்றப்படுத்தவும் முடியாது. இன்று ஒரு வழக்கில் நான் கூறும் தீர்ப்பு, நாளை சுப்ரீம் கோர்ட்டில் மாறுபடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் கே.ஆர். தமிழ்மணி, செயலாளர் வி.ஆர்.கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.