பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா
தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, 1995-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் தாக்கல் செய்யப்பட்டும் 19 ஆண்டுகளாக
அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவில்லை என்று மத்திய அரசைச் சாடியுள்ளது.

மத்திய அரசுக்கு ஆதரவாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பின்கி ஆனந்த், நீதிபதிகளிடத்தில் கூறும்போது, குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகள் பணிப் பிரிவில் பதவி உயர்வு அளிக்க முடியாது. ஏனெனில் அது நியமனம் அல்ல என்பதினால் என்று வாதாடினார்.

நியமனம் என்பது பரந்துபட்ட ஒரு கருத்தாக்கம். ஆனால் மத்திய அரசு இதற்கு குறுகலான விளக்கம் அளிக்கிறது என்று நீதிபதிகள் குழுவினர் அவருக்கு பதிலுரைத்தனர்.


எந்தக் காரணத்திற்காக நாடாளுமன்றத்தில் இதற்குரிய மசோதா தாக்கல் செய்யப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறிய நீதிபதிகள், “இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அரசு வெறுப்படையச் செய்து வருகிறது” என்று சாடினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...