மாணவர்களுக்கான இலவச திட்டங்களுக்காக அரசு பள்ளியில் வசூல்

நீலாங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இலவச பேருந்து பயணச் சீட்டுக்கு 30 ரூபாயும், இலவச சீருடை பெற 15 ரூபாயும், மாணவ, மாணவியரிடம் இருந்து வசூலிக்கப்படுவதாக
புகார் எழுந்துள்ளது.

நீலாங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 280 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு இலவச பேருந்து அட்டை பெற 30 ரூபாயும், இலவச சீருடைக்கு 15 ரூபாயும், மாணவ, மாணவியரிடம் இருந்து வசூலிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, "சிட்லபாக்கத்தில் இருந்து பாடப் புத்தகங்கள், சீருடை ஆகியவற்றை வேன் மூலம் பள்ளிக்கு கொண்டு வருகிறோம். அதற்கு, வேன் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல் பஸ் பாஸ் பெறவும் சில செலவுகள் ஏற்படுகிறது. போக்குவரத்து செலவிற்காகவே இந்த வசூல்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...