மதுரை உயர் நீதிமன்ற கிளை, மாவட்ட நீதிமன்றங்களில் உரிமையியல், குற்றவியல் வழக்குகளின் தேக்கம் கடந்த, 2013ல், 18 லட்சத்தை தாண்டிய நிலையில், 2014 ஆகஸ்ட் வரை, 20 லட்சமாக அதிகரித்துள்ளன.
வழக்குகளின் எண்ணிக்கை :
தமிழகத்தில், சென்னையில், 113, பிற மாவட்டங்களில் 855 என, மொத்தம், 988 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. தமிழக சட்டசபையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடந்த நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை மானியக் கோரிக்கையின் போது, வெளியான கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, நடப்பு, 2013 மார்ச் வரை, 18 லட்சத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற முதன்மை ஆணையத்தில் வழக்குகளின் தேக்க விவரம்:கடந்த, 2012ல், 3,23,241 உரிமையியல் வழக்குகள் நிலுவையாக இருந்த நிலையில், 1,31,320 வழக்குகள் புதிதாக இணைந்தன. இதில், 1,23,939 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 3,30,622 ஆக உயர்ந்தன.குற்றவியல் வழக்குகளை எடுத்துக் கொண்டால், கடந்த, 2012ல், 41,834 நிலுவையில் இருந்த நிலையில், 51,228 வழக்குகள் புதிதாக இணைந்தன. இதில், 48,646 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதால், வழக்குகளின் எண்ணிக்கை, 44,416 ஆக உயர்ந்தன. இதுவே, 2013ல், 54,795 புதிய வழக்குகள் இணைந்த நிலையில், 56,313 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 42,898 ஆக அதிகரித்தது.
மதுரை:
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளின் தேக்க விவரம்: நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 92,595 ஆக உயர்ந்தன. 2012ல், உரிமையியல் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 92,595 என்ற நிலையில், 58,905 வழக்குகள் புதிதாக இணைந்தன. இதில், 45,053 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 1,06,447 ஆக உயர்ந்தன.கடந்த, 2013ல், 66,197 புதிய வழக்குகள் இணைந்தன. 49,417 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 1,23,227 ஆக உயர்ந்தன.குற்றவியல் வழக்குகளில், கடந்த, 2012ல் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 16,066 இருந்த நிலையில், 31,385 வழக்குகள் புதிதாக இணைந்தன. இதில், 28,562 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 18,889 ஆக உயர்ந்தன.
கடந்த, 2013ல், 31,770 புதிய வழக்குகள் இணைந்தன. 56,313 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 24,198 ஆக உயர்ந்தன. சென்னை, மதுரை உயர் நீதிமன்ற கிளைகள், மாவட்ட சார்நிலை நீதிமன்றங்களில், 2013 டிச., 31 வரை, 18,45,794 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நடப்பாண்டில் ஜனவரி துவங்கி, ஆகஸ்ட் வரையிலான, எட்டு மாதங்களில் இரண்டு லட்சம் வழக்குகள் தேங்கி உள்ளதால், நீதிமன்றங்களில் தேக்கம் அடைந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டி விட்டதாக நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்குகளின் தேக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, செப்டம்பர் முதல் வாரத்தில், தமிழக சிறைகளில் நீதிபதிகள் நேரடியாக சென்று லோக் அதாலத் நடத்தி, ஒரே வாரத்தில், 5,000க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியதோடு, 2,800 பேரை விடுவித்தனர்.இது போன்ற லோக் அதாலத்தை வரும், டிசம்பர் மாதத்திலும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடத்துவதற்கு, தமிழக நீதித்துறை, காவல் துறை திட்டமிட்டு வருகிறது.