சத்தான உணவு, பயணச் செலவுக்கு பணமில்லை; போட்டிகளில் பங்கேற்காத தடகள வீரர்கள்

மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளி தடகள வீரர்கள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதில்லை. சத்தான உணவு, தொடர் பயிற்சி மற்றும் வெளியூருக்கு செல்வதற்கான செலவுகளுக்கு பயந்து தயக்கம் காட்டுகின்றனர்.


அரசு பள்ளி மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் குறைந்த தூர மற்றும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர். அதேபோல நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகளிலும் தடம் பதிக்கின்றனர்.

தடகளப் போட்டிகளுக்கு காலை, மாலை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கேற்ப சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்கள் பெரும்பாலும் காலை நேரம் சாப்பிடுவதில்லை. மதிய சத்துணவை நம்பியே வருகின்றனர். சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்பதற்கான போக்குவரத்து செலவைக்கூட செய்ய முடிவதில்லை.

இதனால் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களும் புதிய விளையாட்டுகளில்தான் கவனம் செலுத்துகின்றனர். மாவட்டத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ், குத்துச்சண்டை, டேக்வாண்டோ, சிலம்பம் மற்றும் நீச்சல் போட்டிகளில் நிறைய பதக்கங்களை பெறுகின்றனர்.

தேசிய வீரர்களை உருவாக்கிய மதுரையில், தடகளப் போட்டிகளில் வெற்றி பெறுவோர் குறைந்து வருகின்றனர். அனைத்து மாணவர்களையும் விளையாட்டு விடுதியில் சேர்த்து சிறப்பு கவனம் செலுத்த முடியாது. எனவே, பள்ளியளவில் சிறந்து விளங்கும் தடகள வீரர்களை கண்டறிந்து அவர்களின் உணவுச் செலவை அரசே ஏற்க முன்வர வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...