ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது அசையா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜன. 23) கடைசி நாளாகும். இது குறித்த அறிவுறுத்தல் கடிதத்தை கடந்த 9-ஆம் தேதியன்று அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்திருந்தார், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன். இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகளுக்கான நன்னடத்தை விதிகள் 1968-ன் படி, ஒவ்வொரு அதிகாரியும் தன்னிடம் சொந்தமாக உள்ள சொத்துகள் அல்லது ஒப்பந்தக்கால அடிப்படையில் வாங்கிய சொத்து, அடமானத்தின் வகையிலான அசையா சொத்து ஆகியவற்றின் முழு விவரங்களை வரும் 23-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அதன்படி, வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
ஒரு அதிகாரி தனது பெயரிலோ, மனைவி உள்பட குடும்பத்தில் வேறு யார் பெயரிலோ சொத்துகளை வாங்கியிருந்தாலும் அதுகுறித்த தகவல்களைக் குறிப்பிட வேண்டும். அசையா சொத்துகள் எந்த மாவட்டத்தில், கிராமத்தில் உள்ளது, சொத்தின் பெயர்-விவரம், கட்டுமானத்துக்குரிய செலவு, அதனுடைய இப்போதைய மதிப்பு, ஒரு அதிகாரியின் பெயரில் சொத்துகள் இல்லாவிட்டால் வேறு எந்த உறவினரின் பெயரில் அவை இருக்கின்றன, அந்தச் சொத்தின் வழியாக வரக்கூடிய வருவாய் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இதற்கென தனியான பட்டியல் வரையறுத்து அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 1994-ஆம் ஆண்டு அளித்துள்ள சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்திலான சொத்து விவரங்களை அடுத்த ஆண்டின் முதல் மாதத்துக்குள் (ஜனவரிக்குள்) அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. எனவே, கடந்த ஆண்டுடன் (2014) முடிவடைந்த ஓராண்டு காலத்தில் அசையா சொத்து விவரங்களை இரண்டு மூடப்பட்ட உறைக்குள் அளித்திட வேண்டும் என்று தனது கடிதத்தில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.